அயோடின் விழிப்புணர்வை ஏற்படுத்த அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்
தர்மபுரி, ஜன. 25-
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினரின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை வகித்து
பேசியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில், வணிக ரீதியாக ஒருமுறை பயன்படுத்தும் எண்ணெய்யை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அதிகளவில் சேகரித்து, பயோ டீசலாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே எண்ணெய்யை பலமுறை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், குட்கா விற்பவர்களுக்கு உடனடி அபராதம் விதித்து அவற்றை பறிமுதல் செய்ய வேண்டும். மாவட்டத்தில் ஜஸ், ஜஸ்கிரீம் தயாரிக்கும் நிறுவனங்களில் ஆய்வு செய்து, உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அசைவ உணவு தயாரிக்கும் அனைத்து ஓட்டல்களிலும், தரமான அசைவ உணவுகள் தயாரித்து, பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறதா என, ஆய்வு செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரிகளில் அயோடின் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் பானுசுஜாதா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், தர்மபுரி டவுன் இன்ஸ்பெக்டர் நவாஸ், காரிமங்கலம் யூனியன் உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் தர்மபுரி மாவட்ட ஓட்டல் உரிமையாளர் சங்க நிர்வாகிகள்
உட்பட, பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!