Load Image
Advertisement

பஸ் ஸ்டாண்டுகளை மேம்படுத்தும் பணிக்கு ரூ.1.34 கோடி நகரமன்ற கூட்டத்தில் ஒப்புதல்

தர்மபுரி, ஜன. 25-
தர்மபுரி நகர் மன்ற கூட்டம், தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி சேர்மன் லட்சுமி மாது தலைமையில் நேற்று நடந்தது. நகராட்சி கமிஷனர் சித்ரா, நகராட்சி துணை சேர்மன் நித்யாஅன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தர்மபுரி நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டிலுள்ள நகர் மற்றும் புறநகர் பஸ் ஸ்டாண்டுகளை, 1.34 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்ட்டின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில், 40 லட்ச ரூபாயில் பயணிகள் நிழற்கூடம் அமைத்தல், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றும் பணி மற்றும் சாக்கடை கழிவுநீர் கால்வாய் துார்வாரும் பணி, தனியாரிடம் ஒப்படைப்பது. தடங்கம் கிராமத்தில் உள்ள உரக்கடங்கில் அடிக்கடி மர்ம நபர்கள் தீ வைக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்த, அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, தர்மபுரி நகர பகுதியில் அமைந்துள்ள குப்பைகள் பிரிக்கும் மையங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது உட்பட, 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement