Load Image
Advertisement

வீட்டில் அடைத்து வைத்த 3 கொத்தடிமைகள் மீட்பு

மொரப்பூர், ஜன. 25-
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த மாம்பட்டியை சேர்ந்தவர் செந்தில், 43, கூலித்தொழிலாளி; இவர், சந்தப்பட்டியை சேர்ந்த உறவினர்கள் கோவிந்தன், 42 மற்றும் கிருஷ்ணன், 40, ஆகியோரிடம், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், 3.40 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதன்பின், அவர்களிடம் செந்தில் அவரது மனைவி வேடியம்மாள், 35, மூத்த மகன் செல்வகுமார் ஆகியோர், கேபிள் குழி பறிக்கும் வேலை செய்து வந்தனர். மாதந்தோறும் சாப்பாட்டு செலவிற்கு மட்டும், 1,500 ரூபாய் கோவிந்தன் கொடுத்து வந்துள்ளார். வேலை செய்ததற்கு செந்தில் பணம் கேட்டபோது, கோவிந்தன் பணம் கொடுக்க மறுத்ததுடன், செந்திலை அடித்துள்ளார்.
இந்நிலையில் மத்துாரில் வேலை செய்து கொண்டிருந்த செந்தில் கடந்த, 15ல் தன் குடும்பத்தினருடன் கோவிந்தனுக்கு தெரியாமல் மாம்பட்டிக்கு வந்துள்ளார். கோவிந்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர், கடந்த, 21ல் கணக்கு பார்க்க வேண்டும் எனக்கூறி,
செந்திலை சந்தப்பட்டியிலுள்ள அவர்களது வீட்டிற்கு அழைத்தனர். அங்கு சென்ற செந்திலிடம், 4.50 லட்சம் தர வேண்டும் எனக்கூறி, செந்தில் அவரது மனைவி வேடியம்மாள், மகன் செல்வகுமார் ஆகியோரை திட்டி, தாக்கியதுடன், மூவரையும் வீட்டில் அடைத்து வைத்தனர். தகவலின்படி, சென்ற வருவாய்த்துறையினர், நேற்று அவர்களை மீட்டனர்.
இது குறித்து, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து கோவிந்தன், கிருஷ்ணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement