மாசடைந்த குடிநீரால் பல நோய்கள்
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு, வெட்டுக்காட்டுவலசு பகுதி மக்கள், டாக்டர் சுமதி வஜ்ரவேல் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், புகார் பெட்டியில் நேற்று மனுவை போட்டுவிட்டு கூறியதாவது:
வெட்டுக்காட்டு வலசு பகுதியில், மடிக்காரர் காலனி, போஸ்டல் காலனி, அரும்புகாரர் தோட்டம், காமராஜ் வீதி, சைவ மாரியம்மன் கோவில் பகுதியில், போர்வெல் அமைத்து, சின்டெக்ஸ் டேங்க் வைத்து மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்குகின்றனர்.
இதை தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் எரிச்சல், தோல் நோய், எலும்பு தொடர்பான பிரச்னை, அலர்ஜி என பல நோய் ஏற்படுகிறது.
டாக்டர்கள் ஆலோசனைப்படி குடிநீரை ஆய்வகத்தில் பரிசோதித்தோம். இதில் குடிநீரில், 4,776 டி.டீ.எஸ்., (டோட்டல் டிஸ்சால்வ்டு சால்ட்) உள்ளது தெரிந்தது. குடிக்க பயன்படுத்தும் நீரில், 300 முதல், 500 டி.டீ.எஸ்.,க்கு மேல் இருக்கக்கூடாது. 2,000 டி.டீ.எஸ்.,க்கு மேல் உள்ள குடிநீரை குடிக்கவும், சுத்திகரித்து பயன்படுத்தவும் கூடாதென டாக்டர்கள், ஆய்வகத்தினர் தெரிவிக்கின்றனர். மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள சாய, சலவை, பிளீச்சிங் பட்டறைகளை மூட வேண்டும். மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!