ADVERTISEMENT
சத்தியசங்கலம்: கடம்பூர் அருகே பனி மூட்டதால், 'வாழும் கலை' அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பயணித்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது. இதனால், அங்கு பொது மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலை பகுதியை அடுத்துள்ள உகினியம் கிராமத்தில் இன்று காலை ஹெலிகாப்டர் திடீரென தரை இறக்கப்பட்டது.சத்தம் கேட்ட அந்தபகுதி பொதுமக்கள் என்ன என்று பார்ப்பதற்கு ஒன்று கூடினர்.இந்ததகவலை அறிந்த கடம்பூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரித்த போது வாழும் கலை அமைப்பு நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிச்சங்கர், மற்றும் அவருடன் மூன்று நபர்களும் ஹெலிகாப்டர் பைலட் இருவரும் மொத்தம் 6 பேர் பெங்களூரில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வரும் 27ம் தேதி நடக்கக்கூடிய கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக காலை முன்கூட்டியே புறப்பட்டு வந்தனர்.
கடம்பூர் மலை பகுதி உகினியம் மலை கிராமத்தின் அருகில் வரும்போது மேகமூட்டம் அதிகமாக இருந்ததினால் அங்குள்ள பள்ளி மைதானத்தில் ஹெலிகாப்டரை பத்திரமாக எவ்வித அசம்பாவிதமும் இன்றி தரையிறக்கினர்.பின்பு சுமார் 11.10மணியளவில் மேகமூட்டம் கலைந்த பின்பு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. பனி மூட்டத்தால் திடீரென ஹெலிகாப்டர் தரை இறங்கிய சம்பவத்தால் மலைகிராம மக்கள் அச்சத்துடன் சென்று பார்த்து விட்டு நிலைமை அறிந்ததும்,போட்டோ,எடுத்து மகிழ்ந்தனர்
.கடந்த2022ம் ஆண்டு ஜனவரி 8ம்தேதி இதேபோன்று பனி மூட்டத்தால் அத்தியூர் பகுதியில் தரையிறங்கியது குறிப்பிடத்தக்கது. மலைப்பகுதியில் தரைஇறங்கிய ஹெலிகாப்டர் சம்பவம் காட்டுத்தீபோல் வேகமாக பரவியது.
+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!