குடியரசு தின கலை நிகழ்ச்சி ஒத்திகை
ஈரோடு, ஜன. 25-
குடியரசு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் நடந்த கலை நிகழ்ச்சியில், 600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஈரோடு மாவட்ட குடியரசு தின நிகழ்ச்சி, ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தில், நாளை கொண்டாடப்படவுள்ளது. கலெக்டர் கொடியேற்றி, தியாகிகளை கவுரவபடுத்துகிறார். பின் போலீசார், அலுவலர்களின் பணியை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
இதை தொடர்ந்து பள்ளி கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நான்கு அரசு பள்ளிகள், ஐந்து தனியார்
பள்ளிகளை சேர்ந்த, 600 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர். யோகா, மல்லர் கம்பம் நிகழ்ச்சி, ஊராளி என்ற மலைவாசி மக்கள் நடனம் ஆகியவை அனுமதிக்கப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை, வ.உ.சி., மைதானத்தில் நேற்று காலை நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!