மக்கள் முழுமையாக ஏற்பர் செங்கோட்டையன் நம்பிக்கை
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, பெரியார் நகர் பகுதி அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், கருப்பணன் முன்னிலை வகித்தனர். செயல் வீரர்கள் கூட்டத்துக்கு பின், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
தற்போதைய ஆட்சியில் மக்கள் நினைத்த எந்த பணியும், ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியவில்லை. தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆட்சி மாறியதுபோல, மக்கள் மனநிலையும் மாறியுள்ளது. இரட்டை இலை சின்னம் கிடைக்க நமக்கே முழு வாய்ப்புள்ளது. ஈரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட், புதைவட மின் கேபிள் பதிப்பு திட்டம், வணிக வளாகம் என பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். எனவே, எங்களை மக்கள் முழுமையாக ஏற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை, 150க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அனைவருக்கும், 50 மற்றும், 100 ரூபாய் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!