முதற்கட்ட மாதிரி ஓட்டுப்பதிவு
ஈரோடு, ஜன. 25-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்த, முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட, 500 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், 5 சதவீத இயந்திரங்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டன. அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், 2 சதவீத இயந்திரங்களில் தலா, 1,200 ஓட்டு, 2 சதவீத இயந்திரங்களில், 1,000 ஓட்டும், 1 சதவீத இயந்திரங்களில், 500 ஓட்டு பதிவு செய்தனர். அவை சரியாக பதிவாகி, எண்கள் சரியாக உள்ளதா என உறுதி செய்தனர்.
இதுகுறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், ''முதற்கட்ட மாதிரி ஓட்டுப்பதிவு சரியாக இருப்பதை கொண்டு, இயந்திரங்கள் தயாராக உள்ளதை உறுதி செய்ய முடியும். ஓட்டுப்பதிவுக்கு முன் இதுபோல் இருமுறை மாதிரி
ஓட்டுப்பதிவு நடத்தப்படும்,'' என்றார். அ.தி.மு.க., - தி.மு.க., காங்., கட்சி உள்ளிட்ட நிர்வாகிகள், தேர்தல் தாசில்தார் சிவகாமி, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்து
கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!