சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள் மூன்று பேருக்கு பரிசு
காங்கேயம், ஜன. 25-
தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, காங்கேயம் நகரில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட, மூன்று பெண் குழந்தைகளுக்கு, காங்கேயம் நகராட்சி ஆணையர் வெங்கடேஷ்வரன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
குப்பையை பயன் தரும்
பொருளாக பயன்படுத்தும் வகையில் மாற்றியமைத்த கார்மல் மகளிர் மேல்நிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆனிமஸா; மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் தொடர்ந்து
ஒப்படைத்து வரும், மதர் தெபோரா பள்ளி நான்காம் வகுப்பு மாணவி ரிதன்யா; கடந்த சுதந்திர தினவிழாவில் காங்கேயம் நகர் பகுதியில், வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுமாறு பரப்புரை செய்த, பாரதியார் நகர் அரசுப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கவுசிகா என மூன்று மாணவி
களுக்கு, அவர்கள் படிக்கும்
பள்ளிக்கே சென்று, பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகராட்சி
சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், இளநிலை உதவியாளர் சுப்பிரமணி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!