மாவட்டத்தில் 6 இடங்களில் ஏ.ஐ.டி.யு.சி., மறியல்; 724 பேர் கைது
ஈரோடு, ஜன. 25-
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடக்கோரி, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஆறு இடங்களில் மறியல் நடந்தது. ஈரோட்டில் வீரப்பன்சத்திரத்தில் நடந்த மறியலுக்கு செல்வம் தலைமை வகித்தார். வார்பிங் மற்றும் சைசிங் தொழிலாளர் சங்க தலைவர் ஸ்டாலின் குணசேகரன், தெற்கு மாவட்ட இ.கம்யூ., செயலாளர் பிரபாகரன், வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் உட்பட, ௬௦க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.
எந்த தொழிலிலும், 240 நாட்கள் பணி செய்திருந்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியம், 21 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களை மத்திய அரசு, நான்கு தொகுப்பாக மாற்றி உள்ளதால், தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. அதுபோன்ற தொழிலாளர் விரோத போக்கை கைவிட்டு, முன்புபோல தொழிலாளர் சட்டங்களை உருவாக்க வேண்டும், என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம், 724 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!