வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன் வீடு திரும்பினார்
கோபி, ஜன. 25-
நம்பியூர் அருகே, கிரிக்கெட் வீரனாக வரவேண்டும் எனக்கூறி, வீட்டை விட்டு வெளியேறிய சிறுவன், மீண்டும் வீடு திரும்பினார்.
கோபி அருகே கோட்டுப்புள்ளாம்பாளையத்தை சேர்ந்த, 15 வயது சிறுவன், அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கிரிக்கெட் வீரனாக வரவேண்டும் என கூறி வந்தார். வார விடுமுறை நாட்களில் கிரிக்கெட் விளையாட செல்வார். நேற்று முன்தினம் பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு, 9:00 மணிக்கு, உறவினர் ஈஸ்வரனுக்கு போன் செய்தார்.
கிரிக்கெட் வீரனாக வர வேண்டும் என்பதற்காக, வீட்டை விட்டு வெளியே வந்துள்ளேன். யாரும் தேட வேண்டாம் என கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாத்தா கொடுத்த புகாரின்படி, நம்பியூர் போலீசார், சிறுவனை தேடி வந்தனர். இதையறிந்த சிறுவன், சேலத்தில் இருந்து வீட்டுக்கு திரும்பினார். நம்பியூர் ஸ்டேசனில் சிறுவனை பெற்றோர் ஆஜர்படுத்தினர். போலீசார் சிறுவனுக்கு அறிவுரை கூறி, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!