உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளதால், பணம் எடுத்து வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை நடந்த, கனி மார்க்கெட் ஜவுளி சந்தையில், விற்பனை பாதித்தது.
மொத்தமாக ஜவுளி கொண்டு வரவும், மொத்த வியாபாரிகள், சிறிய கடைகளுக்கான வியாபாரிகள், பணம் கொண்டு வந்து ஜவுளிகளை வாங்கி செல்ல, தேர்தல் நடத்தை விதிகளால் அச்சம் அடைந்துள்ளனர். தவிர ஜவுளி சந்தை, பனியன் மார்க்கெட் நடக்கும் பகுதி, கிழக்கு தொகுதியில் வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா என மாநில வியாபாரிகள், மொத்த வியாபாரிகள் நேற்று மிக குறைவாகவே வந்தனர். 30 சதவீதம் கூட விற்பனை நடக்கவில்லை என்று, வியாபாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.
* கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட விவசாயிகள், ௮௧௫ மூட்டை கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 77.55 ரூபாய் முதல், 86.39 ரூபாய்; இரண்டாம் தரம், 60.62 ரூபாய் முதல், 82.79 ரூபாய் வரை ஏலம் போனது. இதேபோல் தேங்காய் ஏலத்துக்கு, 5,354 காய்கள் வரத்தாகின.
ஒரு கிலோ, 23.05 ரூபாய் முதல், 27.05 ரூபாய் வரை விலை போனது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு, 1,200 மூட்டை வரத்தானது. முதல் தரம் ஒரு கிலோ, 81.69-84.09 ரூபாய்; இரண்டாம் தரம், 58.42-79 ரூபாய் வரை, 56,517 கிலோ கொப்பரை தேங்காய், 4௪ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்தது. இதில் தேங்காய் ஏலத்துக்கு, 2,௦௦௦ காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 22-26.50 ரூபாய் வரை விலை போனது. தேங்காய் பருப்பு, 32 மூட்டை வரத்தாகி, கிலோ, 62.19 - 85.69 ரூபாய்க்கு ஏலம் போனது. துவரை, 467 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 57.69 - 72.59 ரூபாய் வரை விலை போனது. இதேபோல் உளுந்து, தட்டைப் பயிர், பாசிப்பயிறு, மக்காச்சோளம், அவரை வரத்தானது. அனைத்து வேளாண் விளை பொருட்களும், 26.24 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக, விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!