விபத்துகளின் எண்ணிக்கையில் சரிவு சேலம் மாநகர துணை கமிஷனர் தகவல்
சேலம், ஜன. 25-
''சேலத்தில் கடந்த ஐந்தாண்டை ஒப்பிடுகையில், விபத்து, உயிரிழப்பு எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது,'' என, வடக்கு துணை கமிஷனர் மாடசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
சேலத்தில் கடந்த, 2017, 18, 19ம் ஆண்டுகளில் சராசரியாக உயிரிழப்பு விபத்துகளின் எண்ணிக்கை, 245ஆக இருந்தது. அதுவே கடந்த, 2020, 21 கொரோனா காலத்தில் வாகனங்களின் இயக்கத்தில் சரிவு ஏற்பட்டதால், விபத்து உயிரிழப்பு எண்ணிக்கை, 150 ஆக சரிந்தது. ஆனால், 2022ல் வாகனங்களின் எண்ணிக்கை, 70 சதவீதம் அதிகரித்ததால், விபத்து, உயிரிழப்பு எண்ணிக்கை, 230 ஆக இருந்தது. சேலத்தில் விபத்துகளை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போலீசார் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிகளவில் விபத்துகள் நடக்கும், 16 இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதால், விபத்துகள் மட்டுமின்றி அதனால் ஏற்படும் உயிரிழப்பும் குறைந்துள்ளது. விபத்துகளை குறைக்க போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!