Load Image
Advertisement

மொபைல், பணம் பறிப்பு: போலீசார் விசாரணை

சேலம், ஜன. 25-
சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் அடுத்தடுத்து, 2 வெளியூர் பயணிகளிடம் பணம், மொபைல் போனை பறித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தன்ராம்பட்டு அருகே உள்ள தானிபாடியை சேர்ந்தவர் பூமிநாதன், 38; இவர், நேற்று முன்தினம் மதியம், 2:30 மணிக்கு சேலத்தில் உள்ள தனது நண்பரை பார்ப்பதற்கு பஸ்சில், திருவண்ணாமலையிலிருந்து, சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் வந்திறங்கினார்.
அப்போது அவரின், பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த, 62 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள், 'அபேஸ்' செய்தனர். இதுகுறித்து, அவர் பள்ளப்பட்டி போலீசில் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், கெங்கவல்லி அருகே, நாயக்கம்பட்டியை சேர்ந்த பெரியசாமி மகன் அரவிந்த், 29; இவர், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு தனது பேக்குடன், சென்னை மார்க்க நடைமேடையில் நின்றிருந்தபோது, மர்ம நபர்கள் பேக்கை திருடி சென்று விட்டனர். பேக்கில் இருந்த மொபைல் போன், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, விளையாட்டு சான்றிதழ்கள் திருடப்பட்டன. இதுகுறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் அளித்த புகாரையடுத்து, கைவரிசை காட்டிய மர்ம கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement