தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் இல்ல திருமண விழா: அமைச்சர்கள் ஆய்வு
இளம்பிள்ளை, ஜன. 25-
சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் இல்ல திருமண விழா, நடுவனேரியில் வரும், 27ல் நடக்கிறது.
இதையொட்டி நடந்து வரும், மேடை, பந்தல் அமைப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர், நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, மாவட்ட செயலர்கள் செல்வகணபதி, சிவலிங்கம், ராஜேந்திரன், சேலம் எம்.பி., பார்த்திபன், சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் மணிகண்டன், மேயர் ராமச்சந்திரன், பாரப்பட்டி சுரேஷ் குமார், தருண், நடுவனேரி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.
சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை:
சேலம் நடுவனேரி ஊராட்சியில், எங்களது இல்ல திருமண விழா, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமையில், வரும் 27ல் நடக்கிறது. இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார். அதனால், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டு, சிறப்பான வரவேற்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!