ராகவேந்திரா மெட்ரிக் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை விழா
சேலம், ஜன. 25-
ஆத்துார் வீரகனுாரில் உள்ள ராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழா நடந்தது. பள்ளி தலைவர் அருள்குமார் தலைமை வகித்தார். செயலாளர் தங்கவேல், பொருளாளர் வெங்கடாஜலபதி, கல்விக்குழு ஆலோசகர்கள் லஷ்மி நாராயணன், இளையப்பன், பழனிவேல் மற்றும் பள்ளி இயக்குனர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பள்ளி துணை முதல்வர், அறிமுக உரை நிகழ்த்தினார்.
புலவர் ராமலிங்கம் கலந்துகொண்டு பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் குறிக்கோளை அடைய, மனதை எளிமையாக வைத்து படிக்க வேண்டும். பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதே பிள்ளையாகிய உங்களின் கடமை,'' என்றார். தொடர்ந்து, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, பள்ளியில் நடந்த தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். சாலை விபத்தில் தந்தையை இழந்த பள்ளி மாணவி சிவநேத்ரா குடும்பத்தாருக்கு, விபத்து காப்பீட்டு தொகை, 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!