வனக்காப்பாளரை மிரட்டிய 17 பேருக்கு சிறை
சேலம், ஜன. 25-
ஏற்காடு சோதனை சாவடியில், வனக்காப்பாளரை மிரட்டி, மரம் கடத்திய, 17 பேருக்கு, 2 ஆண்டு, 7 மாதம் சிறை, 2.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, தலைமை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
ஏற்காடு வனத்துறை சோதனை சாவடியில், கடந்த, 2012 நவ., 22ல், பணியில் இருந்த வனக்காப்பாளர் ஜெயக்குமார் பணியிலிருந்தார். அப்போது ஏற்காடு மலையில் இருந்து, 'சில்வர் ஓக்' மரங்களை வெட்டிக்கொண்டு கடத்தி வரப்பட்ட, 7 லாரிகளை மடக்கி பிடித்தார்.
மறுநாள் மாலை, 6:30 மணிக்கு லாரி டிரைவர்கள், ஜெயக்குமாரை மிரட்டியதோடு, கேட்டை உடைத்து லாரிகளை எடுத்துச்சென்று விட்டனர். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஏற்காடு போலீசார், ஐயப்பன், சத்தியமூர்த்தி, பெரிய பையன், சபரிவேல், குமார், செல்வராஜ், சித்தைய கவுண்டர், சந்திரன், வேலு, ராமர், சக்தி, ரவீந்திரன், சந்திரசேகர், வெள்ளையன், வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன், வெங்கடேஷ், ஆறுமுகம் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கு சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கிறிஸ்டல் பபிதா, 17 பேருக்கு, தலா, 2 ஆண்டு, 7 மாதம் சிறை தண்டனையும், தலா, 15 ஆயிரம் ரூபாய் என, 2.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதில், பெரிய பையன், சித்தைய கவுண்டர் ஆகியோர் இறந்து விட்டதால், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!