ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் சாலை மறியல்
சேலம், ஜன. 25-
சேலத்தில், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் மறியல் போராட்ட அழைப்பை ஏற்று, அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் நேற்று, காலை, 10:00 மணியளவில், நாட்டாண்மை கழக கட்டடம் முன், ஒருசேர திரண்டனர். போலீஸ் அனுமதி மறுத்தும், அதையும் மீறி தொழிற்சங்க மாவட்ட பொது செயலர் முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொழிற்சங்கத்தின், 44 சட்டங்களை, 4 தொகுப்பாக குறைத்துள்ளதை கண்டித்தும், ஆஷா பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம், 21 ஆயிரம் ரூபாய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதன்பின், ஊர்வலமாக புறப்பட்டு வந்து, கலெக்டர் அலுவலகம் எதிரே, தரையில் அமர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் மறியல் செய்தவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். அதில், முன்னாள் எம்.எல்.ஏ.,வும், ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொது செயலர் பெரியசாமி, கட்டட சங்க மாநில துணைத்தலைவர் கவிதா, இந்திய கம்யூ., சேலம் மாவட்ட செயலர் மோகன் உள்பட, 122 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், 50 பேர் பெண்கள். அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!