சேலம் அரசு மருத்துவமனையில் ரூ.14 லட்சத்தில் உணர்திறன் பூங்கா
சேலம், ஜன. 25-
சேலம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செயல்படும் மாவட்ட ஆரம்ப நிலை இடையீட்டு மையத்தில், குழந்தைகளுக்கு பிறவியில் ஏற்படும் குறைபாடு, நோய்கள், வளர்ச்சி பாதிப்பு உள்ளிட்டவை முன்னதாக கண்டறிந்து, சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிறப்பு முதல், 18 வயது வரையிலான குழந்தைகள் சிகிச்சை பெறலாம். அதற்காக, மையத்தின் கீழ், 20 வட்டாரத்திலும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள், அங்கன்வாடி மையம், பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி, குழந்தைகளுக்கு, பிறவி குறைபாடுகள் கண்டுபிடித்து அழைத்து வந்து, இடையீட்டு மையத்தில் சிகிச்சை பெறலாம். தற்போது, குழந்தைகளுக்கு உணர்திறன் சிகிச்சை அளிக்க, 14 லட்ச ரூபாய் மதிப்பில், உணர்திறன் சிகிச்சை பூங்கா நிறுவி, பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அதை, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், நேற்று திறந்து வைத்தார்.
இதுகுறித்து டீன் மணி கூறுகையில், ''தொடு உணர்வு, கேட்டல் திறனை மேம்படுத்தும் பாதை, பெருந்தசை வளர்ச்சி, ஒருங்கிணைப்பு பகுதி, உடல் சமநிலை, தசை வளர்ச்சி மேம்பாடு, அசைவு உணர்வு ஒருங்கிணைப்பு ஆகிய சிகிச்சை மேற்கொள்ள உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்கா சிறப்பு குழந்தைகளுக்கு, மிகவும் உதவிகரமாக இருக்கும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!