ரயில் பயணிகளிடம் மொபைல் பறிப்பு ஆந்திராவை சேர்ந்தவர் கைது
சேலம், ஜன. 25-
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் திருமூர்த்தி, 41; இவர் கடந்த, 22 நள்ளிரவு, 12:30 மணிக்கு கட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் இருந்து திருப்பூர் செல்ல எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, பொது பெட்டியில் மொபைல் போனுக்கு சார்ஜர் போட்டு விட்டு துாங்கியுள்ளார்.
ரயில் சேலம் அருகே வந்த போது, மொபைல் போன் காணாமல் தேடியுள்ளார். அப்போது கழிவறை அருகே சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்தவரிடம், மொபைல் போனை கேட்டுள்ளார். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசவே, சக பயணிகளின் ஒத்துழைப்புடன், அவரை பிடித்து சோதித்ததில், அவரிடம் 5 மொபைல் போன்கள் இருப்பது தெரிய வந்தது.
பின், சேலம் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம், சித்துாரை சேர்ந்த ஆகாஷ் சேகர், 38, எனபதும், இவர் சேலம் வழியாக செல்லும் ரயில்களில் துாங்கும் பயணிகளிடம் மொபைல் போனை அபேஸ் செய்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!