Load Image
Advertisement

போலீஸ் டைரி - சேலம்

நிலத்தகராறில் 5 பேர் மீது வழக்கு
தாரமங்கலம்: தாரமங்கலம் நகராட்சி, பாரக்கல்லுாரை சேர்ந்தவர் பாலசாமி, 63; இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அன்பழகன், 27, என்பவருக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த, 23ல் மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இதுகுறித்து தாரமங்கலம் போலீசில், பாலசாமி அளித்த புகார்படி, கந்தசாமி, பழனி, வைத்தீஸ்வரன், அன்பழகன் ஆகிய, 4 பேர் மீதும்; அன்பழகன் அளித்த புகார்படி, பிரபாகரன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆற்றில் சடலம் மீட்பு
தாரமங்கலம்: காடையாம்பட்டி, பாப்பாபட்டி பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி சங்கர், 45; இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள சங்கர், கடந்த, 21ல், கருத்தானுாரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்று, பின் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், சரபங்கா ஆற்றில், நேற்று இறந்த நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் மற்றும் நங்கவள்ளி தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். விசாரணையில், காணாமல் போன சங்கர் என தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
சேலம்: சேலம், கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த ரங்கநாதன் மகன் பிரேம்குமார், 30; கட்டட தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் மதியம், 3:30 மணிக்கு, சிவதாபுரம், காட்டூரில் உள்ள வெங்கடேச பத்மநாபன் என்பவர் கட்டி வரும் புதிய வீட்டின் கான்கிரீட் பணிக்கு கம்பி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மின்சார ஒயரை கவனக்குறைவாக தொட்டதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. துாக்கி சாக்கடை கால்வாயில் வீசப்பட்ட அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லுாரி மாணவியை
கடத்தியவர் மீது வழக்கு
சேலம்: சேலம், மஜ்ரா கொல்லப்பட்டியை சேர்ந்த, 17 வயது கல்லுாரி மாணவி. இவரை வேடுகாத்தாம்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகன் தினேஷ், 26, கடந்த, 22 இரவு, 8:30 மணிக்கு கடத்தி சென்று விட்டார். இது குறித்து மாணவியின் தாய், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். போலீசார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 இளம் பெண்கள் மாயம்
சேலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தக்கங்கரை அருகே உள்ள பாவக்கல்லை சேர்ந்த ஜெயகாந்த் மகள் சுஜிதா, 19; இவர் கோவையிலிருந்து சொந்த ஊர் செல்ல, நேற்று முன்தினம் மதியம், 12:45 மணிக்கு சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில், ஈரோடு நடை மேடைக்கு உறவினர்களுடன் வந்தார். பின், இயற்கை உபாதையை கழிக்க செல்வதாக கூறி விட்டு சென்றவர் மாயமானார். இதுகுறித்து அவரின் பாட்டி ரேணு, 63, பள்ளப்பட்டி போலீசில் அளித்த புகார்படி, வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
* நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டையை சேர்ந்த கனகராஜ் மனைவி வினோதினி, 21; இவர், சேலம், வீராணம் அருகே உள்ள சின்னனுாரில் உள்ள தனது தந்தை லோகநாதன், 40, வீட்டுக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்திருந்தார். ஜன., 22 மதியம், 2:00 மணிக்கு வெளியில் செல்வதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரின் தந்தை லோகநாதன் வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார்படி, வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
மேம்பாலத்தில் மோதி வாலிபர் பலி
சேலம்: சேலம், பழைய சூரமங்கலம், ராமலிங்கம் நகரை சேர்ந்த சகாதேவன் மகன் அருண், 32; இவர், நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு தனது, 'ேஹாண்டா ஆக்டிவா' மொபட்டில், ஈரடுக்கு மேம்பாலத்தின் குரங்கு சாவடி பகுதியில் வந்த போது, மொபட் நிலை தடுமாறி தடுப்பு சுவரில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த நிலையில், பலியானார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலத்தகராறில் 2 பேர் மீது வழக்கு
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியை சேர்ந்தவர் முருகேசன், 45; இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜா, 50, அவரது மகன் தர்மா, 23, உள்ளிட்ட இருவருக்கும் ஏற்கனவே நிலத்தகராறில் முன்விரோதம் உள்ளது. கடந்த, 22ல், மீண்டும் ஏற்பட்ட தகராறில், முருகேசன் அவரது பெரியம்மா ராசாத்தி உள்ளிட்ட இருவரையும், ராஜா அவரது மகன் தர்மா ஆகிய இருவரும் தாக்கி உள்ளனர். இதுகுறித்து புகார்படி, வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வண்டல் மண் அள்ளிய
2 லாரி, பொக்லைன் பறிமுதல்
சேலம்: சேலம், அய்யம்பெருமாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தில் வண்டல் மண் அள்ளுவதாக, கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா, வருவாய் ஆய்வாளர் முருகேச பூபதிக்கு நேற்று காலை, 8:00 மணிக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகளை கண்டதும், மண் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினர். இதையடுத்து, மண் அள்ள பயன்படுத்திய, 2 டிப்பர் லாரிகள், பொக்லைன் இயந்திரத்தை வருவாய் அலுவலர்கள், கன்னங்குறிச்சி போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக, செட்டிச்சாவடியை சேர்ந்த சேகர் மகன் சதீஷ், 21, மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement