Load Image
Advertisement

செய்திகள் சில வரிகளில்...

கால்நடை மருத்துவ முகாம்
ஆத்துார்: ஆத்துார் அருகே, வளையமாதேவி கிராமத்தில் நேற்று, கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில், மஞ்சினி கால்நடை மருத்துவர் கோகிலா தலைமையிலான மருத்துவ குழுவினர், வளையமாதேவி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு, சினை பரிசோதனை, தடுப்பூசி போடுதல் பணிகளை மேற்கொண்டனர்.
வேளாண் கல்லுாரி
மாணவியருக்கு செயல் விளக்கம்
பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவியர் தங்கி, வேளாண் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று, சீலநாயக்கன்பட்டியிலுள்ள உயிரியல் கட்டுப்பாடு ஆய்வகத்தில், பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த பயன்படும் உயிரியல் காரணிகள் உற்பத்தி முறைகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, உயிரியல் காரணிகளை உற்பத்தி செய்யும் முறை, பயன்பாடு பற்றி, வேளாண் அலுவலர் கவிதா மாணவியருக்கு விளக்கினார்.
இன்று காளான் வளர்ப்பு பயிற்சி
பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் வெளியிட்ட அறிக்கையில், 'வேளாண் அறிவியல் நிலையத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு காளான் வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. இதில், பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், 94435 09438, 90955 13102 எண்ணில் முன் பதிவு செய்துகொள்ள வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரியம்மன் கோவில்
தேர் வெள்ளோட்டம்
ஆத்துார்: ஆத்துார் அருகே, நரசிங்கபுரம், தெற்கு தில்லை நகர் பகுதியில், சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், புனரமைக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் விழா, நேற்று நடந்தது. அப்போது, தேர் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் இழுத்து வந்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டி மீட்பு
ஆத்துார்: ஆத்துார் அருகே, கல்பகனுார், சிவகங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மணி, 45; விவசாயி. இவரது தோட்டத்தில் வளர்த்து வந்த கன்றுக்குட்டி, நேற்று, 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்த ஆத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள், கிணற்றில் விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் மீட்டு ஒப்படைத்தனர்.
பத்ரகாளியம்மனுக்கு
தீர்த்தக்குட ஊர்வலம்
தாரமங்கலம்: தாரமங்கலம், மோட்டுப்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம், நேற்று நடந்தது. கைலாசநாதர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம், முளைப்பாரி எடுத்து, பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, இன்று இரண்டாம் கால யாக பூஜை நடக்கிறது. நாளை, மூன்றாம் கால யாக பூஜை முடிந்து, காலை, 9:30 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.
மாசி பெரியாண்டவர்
கோவில் கும்பாபிஷேகம்
பனமரத்துப்பட்டி: பள்ளித்தெருப்பட்டி ஊராட்சி, பாறையூரில் மாசி பெரியாண்டவர் சுவாமி கோவில் உள்ளது. அங்குள்ள சக்தி விநாயகர், சப்த கன்னிமார், மாயவ பெருமாள், கருப்பணார், மாசி பெரியாண்டவர் சுவாமிக்கு கும்பாபிஷேக விழா, நாளை மறுநாள் நடக்கிறது. நாளை காலை, விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்குகிறது.
மண்டல பூஜை நிறைவு விழா
ஆத்துார்: ஆத்துார் அருகே, பைத்துாரில் இளங்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு செய்து, கடந்த மாதம் கும்பாபி ேஷகம் நடந்தது. தொடர்ந்து, மண்டல பூஜை நடந்து வந்தது. நேற்று, மண்டல பூஜை நிறைவு விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்துார், புதுகொத்தாம்பாடியில், கடந்த மாதம், சக்திமாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது. இக்கோவிலில் நேற்று, மண்டல பூஜை நிறைவு விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.ரயில்களில் சோதனைசேலம், ஜன. 25-
குடியரசு தினத்தை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்களில் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நேற்று சேலம் வழியாக வடமாநிலங்கள், தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். திப்ருகரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் போலீசார் சோதனை செய்தனர்.
மேலும், ரயில்வே பிளாட்பாரங்கள், பயணிகள் தங்கும் இடங்களில் பயணிகளின் உடமைகளை சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்தவர்கள், ரயில்களில் பயணித்தவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு
ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம், ஜன. 25-
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்கம் சார்பில், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ஜெகஜோதி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பாரபட்சமின்றி, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ள, 10 சதவீத ஊதிய மாற்றத்தை அமல்படுத்திட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பெட்ரோல் பங்கில் தகராறு
மேச்சேரி, ஜன. 25-
மேச்சேரி அருகே, சாத்தப்பாடியை சேர்ந்தவர் வேலாயுதம், 53; இவர் மேச்சேரி-ஓமலுார் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் மேலாளராக உள்ளார். கடந்த, 17ல், பங்க் ஊழியர்களிடம் வாலிபர் ஒருவர் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு, பெட்ரோல் பம்ப் மீது கல்லை கொண்டு எறிந்து சேதப்படுத்தியுள்ளார். இது தொடர்பாக வேலாயுதம் நேற்று, மேச்சேரி போலீசில் அளித்த புகாரையடுத்து, தகராறில் ஈடுபட்ட மேச்சேரி, பாரப்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ், 27, என்ற வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement