உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை திரளாக பங்கேற்க அழைப்பு
சேலம், ஜன. 25-
'உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கும் கூட்டத்துக்கு, திரளாக பங்கேற்க வேண்டும்' என கட்சியினருக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வகணபதி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தி.மு.க., இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சேலம் வருகை தர உள்ளார். அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சேலம் வரும் அவருக்கு, ஜன., 26, (நாளை) மாலை, 6:30 மணிக்கு, சங்ககிரி சின்னாகவுண்டனுார் பைபாசில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஜன., 27 மதியம், 3:30 மணிக்கு, குரும்பப்பட்டி, இடைப்பாடி ரிங் ரோடு அருகில், கட்சிக்காக உழைத்த, 1,000 நலிந்த கட்சி முன்னோடிகளை பாராட்டும் வகையில், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு தலைமையில் நடைபெறும் விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பொற்கிழி மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசுகிறார்.
இந்த இரு நிகழ்ச்சியிலும், கட்சி நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!