ஜவுளி கடைகளில் கூட்டாய்வு 2 குழந்தை தொழிலாளர் மீட்பு
சேலம், ஜன. 25-
ஜவுளி கடைகளில் நடந்த கூட்டாய்வில், 2 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்), கிருஷ்ணவேணி கூறியிருப்பதாவது:
சேலம் மாவட்டத்தில் நேற்று, ஜவுளி விற்பனை நிலையம், நுாற்பாலைகளில் குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்களா என்பதை கண்காணிக்கும் பொருட்டு, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், இரண்டாவது அக்ரஹாரம், ஐந்து ரோடு சிப்காட் வளாகம் பகுதிகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.
சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட், முதல் மற்றும் இரண்டாம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள, 26 ஜவுளி விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 18 வயதுக்குட்பட்ட, 2 வளரிளம் பருவ குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் எவரையும் பணியமர்த்த கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, குறைந்தபட்சம், 6 மாதம் முதல், 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அல்லது, 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
குழந்தை தொழிலாளர்கள் எவரேனும் பணியமர்த்தப்பட்டிருந்தால், இலவச தொலைபேசி எண் 1098 ஐ, தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!