மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு புதிய சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே
மேட்டூர், ஜன. 25-
'மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு, புதிய சி.டி.ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவிகள் வழங்கப்படும்' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேட்டூர் அரசு மருத்துவமனையில், நகர்புற நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று, ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, '10 ஆண்டுகாலம் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய சி.டி.ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே கருவிகளை மாற்றி தரவேண்டும்' என, மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் இளவரசி அமைச்சரிடம் தெரிவித்தார்.
அதையேற்று, 'உடனடியாக புதிய அதிநவீன சி.டி.ஸ்கேன் மற்றும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி வழங்கப்படும்' என, சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
எம்.பி., நலத்திட்ட உதவி
தி.மு.க.,வை சேர்ந்த சேலம் எம்.பி., பார்த்திபன், தனது ஊதியத்திலிருந்து ஆண்டுதோறும், 25 லட்ச ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், நேற்று, 4வது ஆண்டாக நடந்தது. சேலம் தொங்கும் பூங்கா, மாநகராட்சி பல்நோக்கு கூட்டரங்கில் நடந்த விழாவில் எம்.பி., பார்த்திபன் வரவேற்றார். அமைச்சர்கள் நேரு, சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். மாவட்ட செயலர்கள் ராஜேந்திரன், டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மண்டலகுழு தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், தலைவாசல் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று, சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், மருத்துவ பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 10 மாணவ, மாணவியருக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார். வளாகத்தில், 400 பேருக்கு கண் பரிசோதனை செய்தனர். 180 பேர் ரத்த தானம் வழங்கினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!