முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் ஓமலூரில் பழனிசாமி ரகசிய ஆலோசனை
ஓமலுார், ஜன. 25-
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.,வும் போட்டியிலிருந்து ஒதுங்கிக்கொண்டது. பிளவுபட்டுள்ள அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் என, இரு தரப்பும் போட்டியிட தயாராகி வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று மாலை, ஓமலுார் கோட்டமேட்டுப்பட்டியில் உள்ள, அ.தி.மு.க., சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிள் பங்கேற்ற ரகசிய கூட்டம் அலுவலக தரைத்தளத்தில், மாலை, 4:45 மணிக்கு துவங்கியது.
அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.பி.அன்பழகன், பென்ஜமின், செல்லுார் ராஜூ, விஜயபாஸ்கர், வளர்மதி, கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திரபாலாஜி, கே.சி.சம்பத், இசக்கிசுப்பையா ஆகியோர் பங்கேற்றனர்.
மூன்று மணி நேரம் நடந்த கூட்டத்தில், இடைத்தேர்தல் பணிகள் குறித்தும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்து ஆலோசனை நடந்தது. கூட்டத்தை படம் எடுக்க பத்திரிகையாளர்களை அனுமதிக்கபடவில்லை. கூட்டம் முடிந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர்கள் பேட்டியை தவிர்க்க வேகமாக சென்று காரில் ஏறி புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து அலுவலகத்தை விட்டு வெளியே இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கை கும்பிட்டவாறு பேட்டியளிக்காமல் காரில் புறப்பட்டு சென்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!