கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை: வீட்டை எழுதி கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
சேலம், ஜன. 25-
சேலத்தில் கடன் தொல்லையால் தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த வழக்கில், கொடுத்த கடனுக்கு வீட்டை எழுதி தரும்படி கேட்டு மிரட்டிய, இருவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், அழகாபுரம், பெரியபுதுார் மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன், 66; இவரது மனைவி சாந்தி, 55; இவர்களுக்கு, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த, 2012ல் இந்தியன் வங்கியில் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். அதற்கான தவணை தொகையை முறையாக செலுத்தாததால், கடந்த, 2018ல் வீட்டை ஏலம் விட உள்ளதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வீட்டை மீட்பதற்கு, ராஜேந்திரன் அதே பகுதியை சேர்ந்த மம்மு நடேசன், 75, மூலமாக, உலகநாதன், 45, என்பவரிடம், 18 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த தொகையை வங்கியில் செலுத்தி வீட்டின் மூலப்பத்திரத்தை மீட்டு, உலகநாதனிடம் கொடுத்துள்ளார்.
கடந்த சில மாதங்கள் கழித்து, உலகநாதன் தான் வழங்கிய கடனுக்கு, 'வட்டியுடன் சேர்த்து, 40 லட்சம் ரூபாய் தர வேண்டும் அல்லது வீட்டை எழுதி கொடுக்க வேண்டும்' என, ராஜேந்திரன், இவரது மனைவி சாந்தி ஆகியோரை மிரட்டியுள்ளார். ஆனால், அவர்களுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையில், பெற்ற மகன்களும், மகளும் உதவ முன் வரவில்லை. அதேநேரம், வீட்டை விற்க மனம் இல்லாததால், நேற்று முன்தினம் இரவு, தம்பதியர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அழகாபுரம் போலீசார், தம்பதியரின் உடல்களை மீட்டு, விசாரணை நடத்தினர். அதில், தம்பதியரிடம் கந்து வட்டி கேட்டும், வீட்டை எழுதி தரும்படியும் மிரட்டிய உலகநாதன், மம்மு நடராஜன் ஆகியோரை போலீசார், நேற்று காலை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!