கழுத்தை நெரித்து தர்மபுரி வக்கீல் கொலை: குற்றவாளிகளை பிடிக்கக்கோரி உறவினர்கள் மறியல்
கிருஷ்ணகிரி, ஜன. 25-
குருபரப்பள்ளி அருகே, தர்மபுரியை சேர்ந்த வக்கீல் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி அடுத்த மேலுமலை அருகே ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு நின்றிருந்த காரை, ரோந்து போலீசார் ஆய்வு செய்தனர். காருக்குள் ஒருவர் வெள்ளை நிற சட்டை, பேண்ட் அணிந்த நிலையில் இறந்து கிடந்தார். குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டனர். அவரது சட்டையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அவர், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த வக்கீல் சிவக்குமார், 44, என தெரிந்தது.
விசாரணையில், நேற்று முன்தினம் காலை அவர், தர்மபுரி நீதிமன்றத்தில் இருந்தபோது, அவரை இருவர் சந்தித்துள்ளனர். அப்போது, குருபரப்பள்ளி போலீசில் பிடிபட்டுள்ள தங்களின் குட்கா வாகனத்தை மீட்டுத்தர கேட்டுள்ளனர். இதனால் அவர்களுடன் சிவக்குமார், தன் ஜூனியர் வக்கீல்கள் அருள், கோகுலகண்ணனுடன், தன் காரில் கிருஷ்ணகிரி வந்துள்ளார். குட்கா வாகனத்தை மீட்க கோரியவர்கள், வாகனத்தின் ஆவணங்கள், தங்கள் சகோதரரிடம் இருப்பதாக கூறினர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே டீக்கடையில் தன் ஜூனியர் வக்கீல்களை இறக்கி விட்ட சிவக்குமார், அவர்களுடன் காரில் சென்றுள்ளார். நீண்ட நேரமாகியதால் சந்தேகமடைந்த ஜூனியர் வக்கீல்கள், சிவக்குமாருக்கு போன் செய்தபோது, அது சுவிட்ச்ஆப் ஆகியிருந்தது. இதையடுத்து அவர்கள், சிவக்குமாரை தேடி தர்மபுரி சென்றனர். இந்நிலையில் சிவக்குமார் சடலமாக மீட்கப்பட்டது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர்.
சம்பவ இடத்தில் கிருஷ்ணகிரி எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் ஆய்வு செய்தார். கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நடந்த சிவக்குமாரின் உடற்கூறாய்வில், கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டது தெரிந்தது. அவர் மனைவி வனிதா புகார்படி, குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிந்தனர்.
கொலையான வக்கீல் சிவக்குமாரின் உறவினர்கள், 300க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி முன் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசியநெடுஞ்சாலையில், சாலைமறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகளை, போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும். அதுவரை சிவக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைத்தனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி., சரோஜ்குமார் தாக்கூர் கூறுகையில், ''இக்கொலை தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவர்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!