Load Image
Advertisement

வாழ்க தமிழ்நாடு; வளர்க பாரதம் என உரையில் கவர்னர் ரவி பேச்சு


சென்னை: சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் 'வாழ்க தமிழ்நாடு வளர்க பாரதம்' என தமிழக கவர்னர் ரவி உரை முடித்தார்.

Latest Tamil News


Tamil News
Tamil News
இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன. 25ல் தொடங்கப்பட்டது. இது ஒரு தன்னாட்சி அதிகாரம் மிக்கது. இதன் 60வது ஆண்டுவிழாவை சிறப்பிக்கும் விதமாக 2011 ஜன. 25ல் தேசிய வாக்காளர் தினம் தேர்தல் ஆணையத்தால் துவக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய வாக்காளர் தினமான இன்று(ஜன.,25) தேர்தல் பணியில் சிறப்பாக செயல்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கவர்னர் ரவி கலந்து கொண்டு சேலம், தருமபுரி, தென்காசி, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விருது வழங்கினார்.

நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வந்த பிறகு ஒளிவு மறைவின்றி ஓட்டுப்பதிவுகள் நடக்கிறது. இளம் வாக்காளர்களுக்கு பொறுப்பு இருக்கிறது; வாக்களிக்கும் சதவிகிதம் 90% வரை செல்ல வேண்டும்.

100% ஓட்டுப்பதிவை அடைய மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகம் சிறப்பாக செயல்படுகிறது. சுமார் 70% ஓட்டுபதிவை அடைந்துவிட்டோம், மற்ற அனைவரும் சேர்ந்து ஓட்டுப்பதிவை 80% க்கு மேல் கொண்டு செல்வோம்.

Latest Tamil News

மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்போம். கடந்த சில தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பெண் வாக்காளர்கள் அதிகம் வாக்களித்துள்ளனர்; பெண்கள் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என சுதந்திரமாக முடிவு எடுக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


தமிழ்நாடு என குறிப்பிட்டு உரையை முடித்த கவர்னர்:

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நிகழ்ச்சி ஒன்றில், 'தமிழ்நாடு என்பதற்கு பதிலாக தமிழகம் என்பதே சரியாக இருக்கும்' என குறிப்பிட்டு பேசியிருந்தார். சர்ச்சையான பிறகு அதற்கு கவர்னர் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து கடந்த இரு தினங்களுக்கு முன் திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு எனு குறிப்பிட்டு பேசினார். அதேபோல் பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற வார்த்தை உபயோகிக்காத கவர்னர் குடியரசு தின அழைப்பிதழில் தமிழ்நாடு என குறிப்பிட்டு இருந்தார். இது பல்வேறு தரப்பினரிடையே வியப்பாக பார்க்கப்பட்டது.


இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின விழாவில் 'வாழ்க தமிழ்நாடு வளர்க பாரதம்' என தமிழக கவர்னர் ரவி உரை முடித்தார்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (29)

 • velan - california,யூ.எஸ்.ஏ

  அவ்வளவுதான் .. இதை முன்னாடியே செய்திருக்கலாம் ... வெண்டிக்காயை வெளக்கெண்ணைல போட்டு குழப்பினை மாதிரி .... என்னங்க நமக்கு ஏ பி ஜெ அப்துல் கலாம் ஒரு ரோல் மாடல் இருக்காரு ... அரசியலில் சிக்காமல் வளர்ந்த இந்தியாவை நோக்கி நமது பயணம் சிந்தனை இருக்க வேண்டும் . தேவை அற்ற விதண்டா வாதங்களை விட்டு மக்களுக்கு முன்னதாரணாமாக திகழ வேண்டும் . என்னமோ போங்க என் வாழ்நாளில் இந்தியா வளருமா இல்லை இப்படியே மதம் சாதி மொழி வர்க்கம் இதில் சிக்கி தவிக்குமா தெரியல ...

 • Barakat Ali - Medan,இந்தோனேசியா

  திராவிட நாடு என்று உருட்டியவர்களை தமிழ்நாடு என்று உருட்ட வைத்துவிட்டார் .... உருட்டியவர்களுக்கு தமிழ் மீதோ, தமிழர் மீதோ எந்தப்பற்றும் இல்லை ....

 • ஆரூர் ரங் -

  இதில் கூட இந்தியா என்று அன்னியப் பெயரை கூறாமல் பாரதம் எனும் ஒரிஜினல் பெயரைக் கூறியுள்ளார். இது கூட உ.பி ஸ் க்கு வெறுப்பேற்றும்.

 • பேசும் தமிழன் -

  இது திராவிட நாடு அல்ல ....தமிழ்நாடு ..... தமிழர்களுக்கானது....தெலுங்கு ...கன்னடம் ....மலையாளம்....பேசும் மக்களுக்கானது அல்ல ...என்பதே ஆளுநர் சொன்ன பிறகு தான்...திருட்டு திராவிட கும்பலுக்கு நினைவுக்கு வருகிறது....இதுவரை ...இது திராவிட நாடு என்று கதை கட்டி வந்தவர்களை....அவர்கள் வாயாலேயே .....தமிழ்நாடு என்று கூற வைத்ததற்கு ஆளுநர் அவர்களுக்கு ...தமிழர்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  பாரதியாரின் கூற்றின்படி தமிழகத்தை செந்தமிழ் நாடு என்றே அழைக்கலாம் அதுதான் சரி. செந்தமிழ் நாட்டினிலும் போதினிலே என்ற பாடலே இதற்கு அத்தாட்சியாகும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்