ADVERTISEMENT
புதுக்கோட்டை: முழுமையான வெற்றி கிடைக்கும் வரை தனித்து தான் தேர்தலில் போட்டியிடுவோம் எனக் கூறியுள்ள நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‛2024 லோக்சபா தேர்தலில் என் ஆட்டத்தை பாருங்கள்' என்றும் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., கட்சி பலமாக இல்லை. பலமாக இருந்தால், என்னைப்போல தனியாக நிற்கலாம். எனக்கு முழு வெற்றிக்கிடைக்கும் வரை நாங்கள் சோர்வடையாமல் தனித்து தான் தேர்தலில் போட்டியிடுவோம்.

அரவிந்த் கெஜ்ரிவாலால் முதல்வராக முடியும்போது சீமானால் முடியாதா?. என் தலைமையில் கூட்டணிக்கு யார் வந்தாலும் சேர்ப்பேன், ஆனால் என் கட்சி சின்னத்தில் தான் நிற்க வேண்டும். இடைத்தேர்தலில் நான் உறுதியாக வெல்வேன். 2024 லோக்சபா தேர்தலில், என்னோட ஆட்டத்தை பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (42)
நிச்சயம் முடியாது
டக் அவுட் ஆவதற்கு முன்னாடி அவரே விக்கட்டை உதைத்து ஹிட் விக்கட் அவுட் ஆகிற ஆட்டம் ஆடுவேன்னு சொல்லுகிறார்.
சீமான் பிரிக்கும் ஓட்டுகள் அதிமுக-பிஜேபிக்கு லாபம். ஆனாலும் கறி ஜெயிக்கவே முடியாது ஜெயிக்கவும் கூடாது.
உன் மத அடையாளங்களை மறைத்து தும்பிகளை ஏமாற்றி பிழைக்கிறாய்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஜோதிடப்படி சீமான் ஒரு நல்ல பேச்சாளர்... அதே சமயம் அவர் என்றுமே ஒரு கவுன்சிலராக கூட ஆகமாட்டார்...