Load Image
Advertisement

தமிழகத்தில் ரூ.2,200 கோடி முதலீடு இந்தியன் ஆயில் நிர்வாக இயக்குனர் பேட்டி

Tamil News
ADVERTISEMENT
''தமிழகத்தில், இந்தியன் ஆயில் நிறுவனம் அடுத்த, இரண்டாண்டுகளில், 2,200 கோடி ரூபாயை முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது,'' என, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், தமிழக மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் அசோகன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே பெரியகளந்தையில் உள்ள, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காஸ் நிரப்பும் ஆலையை,தமிழகம் - புதுச்சேரி நிர்வாக இயக்குனர் அசோகன் ஆய்வு செய்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில், 13 மாவட்டங்களில் உள்ள வீடுகளுக்கு, சி.என்.ஜி., மற்றும் குழாய் எரிவாயுவை வினியோகம் செய்யும் உரிமையை ஐ.ஓ.சி., பெற்றுள்ளது. எண்ணூர் -- திருவள்ளூர், -பெங்களூரு - -புதுச்சேரி, -நாகப்பட்டினம் - -மதுரை, துாத்துக்குடி எரிவாயு குழாய் மற்றும் சென்னை - திருச்சி - -மதுரை எரிவாயு குழாய் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களுக்காக, இரண்டாண்டுகளில், 2,200 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளோம்.

இந்தியன் ஆயில், இஸ்ரேல் தொழில்நுட்ப நிறுவனமான பினெர்ஜியுடன் கைகோர்த்து, அலுமினியம் காற்று தொழில்நுட்பத்தை தயாரித்து வணிகமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement