ADVERTISEMENT
புதுடில்லி: லக்கிம்பூர் கேரியில் கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் மகன் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ராவுக்கு 8 வாரம் இடைக்கால ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் அவர், டில்லி மற்றும் உ.பி.,யில் தங்கியிருக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2021 அக்., 3 ல் விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது ஆஷிஸ் மிஸ்ரா வந்த சொகுசு கார் அவர்கள் மீது மோதியது. அதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து ஏற்பட்ட போராட்டத்தில் 3 பாஜ.,வினர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், ஆஷிஸ் மிஸ்ராவுக்கு 8 வாரம் ஜாமின் வழங்கியதுடன், அவர் டில்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தங்கியிருக்கக்கூடாது. ஒரு வாரத்தில் உ.பி.,யை விட்டு வெளியேற வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!