ADVERTISEMENT
புதுடில்லி : ராஜ்யசபா நியமன எம்பி.,யாக உள்ள இசையமைப்பாளர் இளையராஜா நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்கள், ஜனாதிபதியால் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். அந்த வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் ராஜ்யசபா நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் இவர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த இளையராஜா இந்தியா திரும்பியதும் பதவியேற்றுக் கொண்டார்.
![Latest Tamil News]()
இந்த நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபா நியமன எம்பியான இசையமைப்பாளர் இளையராஜா ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை. இது மாநிலங்களவை வெளியிட்டுள்ள பதிவேட்டு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறை சார்ந்த வல்லுனர்களை ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்வு செய்வது என்பது அந்த துறையின் சார்பில் உள்ள பிரச்னைகளை அரசின் கவனத்தை கொண்டு வருவதற்காகத்தான். ஆனால் அவ்வாறு நியமிக்கப்படுகிறவர்கள் அதனை வெறும் அலங்கார பதவிகளாகத்தான் பயன்படுத்தி வருகிறார்கள் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

வாசகர் கருத்து (31)
..kondaiya marikavum ..( topiya )
அங்கே ஒரு இசை கச்சேரி வைத்தால் போவார்.
The Rajyasabha MP post been given to Isai Gnani Ilaiyaraja to honour him for his excellent services to the Music industry.
நமது பாராளுமன்ற எம்.பி க்கள் மக்களுக்காக என்ன பணியாற்றுகின்றனர் ???ஒன்றுமே இல்லை .ஆனால் அரசாங்கத்திடம் இருந்து எல்லா சலுகைகளும் பெற்று மக்களின் வரிப்பணத்தில் சுக போக வாழ்க்கை வாழ்கின்றனர் .
இசைஞானி இளையராஜாவிற்கு அவருடைய இசைப் பணிக்காக அவரை கௌரவிக்கும் விதத்தில் ராஜ்ய சபா எம்.பி பதவி கொடுக்கப்பட்டது .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சர்வாதிகாரியை துதிபாடவும், அவர் இயற்றும் சர்வாதிகார சட்டங்களுக்கு மண்டையாட்டவும் ஏற்படுத்தப்பட்ட சபை தான்