ADVERTISEMENT
திருவனந்தபுரம்: பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிடப்பட்ட ஆவணப்படத்திற்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் அந்தோணியின் மகன் அனில் கே அந்தோணி கண்டனம் தெரிவித்தார். இதற்கு கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம், 2002 ல் நடந் குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்பு படுத்தி உள்ளனர். இந்த படத்தை வெளியிட மத்திய அரசு தடை விதித்தது.
இந்த படத்திற்கு, அனில் கே. அந்தோணி சமூக வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், '' பா.ஜ.,உடன் பெரிய அளவிலான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட, நான் நினைப்பது என்னவென்றால், பிரிட்டன் அரசு சார்பில் நடத்தப்படும் பிபிசி சேனல் இந்தியர்களைப் பற்றி நீண்ட காலமாகவே தவறான எண்ணம் கொண்டுள்ளது தான்.
அந்த சேனலில், ஈராக் போருக்கு மூளையாக இருந்த பிரிட்டன் முன்னாள் உள்துறை அமைச்சர் ஜேக் ஸ்டராவின் கருத்தை, இந்திய நிறுவனங்கள் மீது பதிப்பது ஆபத்தான முன்னுதாரணம். நம்முடைய இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் எனக்கூறியிருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அனில் கே. அந்தோணி கூறி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரள காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியில் எனக்கு அளிக்கப்பட்ட பதவியில் இருந்து நான் விலகுகிறேன்.
நான் பதிவிட்ட கருத்துக்கு பேச்சுசுதந்திரத்துக்கு போராடுபவர்களால் சகிப்புத்தன்மையற்ற அழைப்புகள் எனக்கு வந்தன. நான் மறுத்துவிட்டேன். அன்பை ஊக்குவிக்கிறேன் என்ற பெயரில் வெறுப்பு வளர்கிறது. அனைத்தும் போலித்தனம். என்னுடைய ராஜினாமா செய்கிறேன்.
நடந்த சம்பவங்களை கருத்தில் கொண்டு, கட்சியில் இருக்கும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவது சரியானது என்று நினைக்கிறேன்.

கேபிசிசி டிஜிட்டல் மீடியா நிறுவனம், காங்கிரஸ் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்தும் விலகுகிறேன். குறுகிய காலத்தில் எனக்கு ஆதரவு அளித்த, வழிகாட்டிய கேரள காங்கிரஸ் தலைமை மற்றும் சசிதரூர், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
காங்கிரஸ் கட்சிக்கு பல்வேறு வழிகளில் என்னால் முடிந்த அளவு எனக்குரிய தனிப்பட்ட சக்திக்கு மீறி பங்களிப்பை அளித்திருக்கிறேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
இப்போது, நீங்களும், உங்கள் சகாக்களும் தலைமையை சுற்றியிருக்கும் கூட்டத்தினரும் சந்தேகத்திற்கு இடமின்றி உங்கள் ஆதரவாக இருக்கும் உங்களைப் புகழ்ந்து பேசும் சிலருக்காக மட்டுமே பணியாற்ற ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை நான் நன்கு அறிவித்திருக்கிறேன். இதுவே தகுதிக்கான ஒரே அளவுகோலாக மாறிவிட்டது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
பதவி விலகம் தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அனில் கே.அந்தோணி அளித்த பேட்டி: இரவு முழுவதும் எனக்கு மிரட்டல் அழைப்புகளும், வெறுப்பு செய்திகளும் வந்துள்ளன. கடந்த 24 மணி நேரத்தில், ஏராளமான விஷயங்கள் எனக்கு நடந்துள்ளன. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் குறிப்பிட்ட பிரிவினரிடம் இருந்து. இவை என்னை காயப்படுத்தி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (23)
நமது பாரதத்தின் சொத்தான கோஹினூர் வைரம்.... சிம்மாசனம் போன்றவற்றை பிரிட்டிஷார் கொள்ளையடித்து சென்றனர்
உங்களால் காங்கிரசில் பணியாற்ற முடியாது. தேசபக்திக்கு காங்கிரசில் இடமில்லை.
நல்ல தேசபக்தர்கள் இப்படித்தான் செய்வார்கள். பாராட்டுக்கள்.
ஆமா... இவன் யாரு ??
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மனிதம் காப்போம் மனிதம் வளர்ப்போம், அனில் அந்தோனிக்கு நல்வாழ்த்துக்கள். கடவுள் தேசம் என்றழைக்கப்படும் கேரளாவில் இருந்து மீண்டும் ஓர் உன்னத ஒளிக்கீற்று. மீண்டும் வாழ்த்துக்கள்.