வாஷிங்டன்: பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக பிபிசி தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம், 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த மோடியை தொடர்பு படுத்தியுள்ளனர்.
இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கும் ஆவணப்படம் குறித்து தனது ஆட்சேபத்தை தெரிவித்தார். ‛இந்திய பிரதமர் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை' என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவரிடம் பிபிசி ஆவணப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்: நீங்கள் சுட்டிக்காட்டும் இந்த ஆவணப்படம் பற்றி எனக்கு தெரியாது. ஆனால் நான் விரிவாக சொல்வேன், நமது இந்திய தரப்புடன் நாம் கொண்டுள்ள உலகளாவிய மூலோபாய கூட்டாண்மைக்கு அடித்தளமாக பல விஷயங்கள் உள்ளன. இவ்வாறு பதிலளித்தார்.
அதேபோல், ஜோ பைடனின் நிர்வாக அதிகாரிகள், ஆவணப்படத்திற்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன், இந்திய - அமெரிக்க உறவுகள் வலுவான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (17)
ஜாலியன்வாலா பாக் கொடூர கொலை செய்த ஜெனரல் டயர் இவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை. கல்கத்தா பிளாக் ஹோல் கொலை மறந்துவிட்டது. அந்தமானில் ஜெயிலில் சுதந்திர போராட்ட கைதிகளை துன்புறுத்தி கொன்றது மறந்துவிட்டது.வா வு சி அவர்களை செக்கு இழுக்க வைத்து கொன்றது மறந்துவிட்டது இந்த பரதேசி நாய்களுக்கு.
பிரதமர் மோடிஜியினால் இந்தியா வளர்ந்து வருவதை பொறாமையினால் கெடுக்க முயலும் சக்திகள். அண்மையில் பிரிட்டன் செலுத்திய ராக்கெட் கீழே விழுந்து பிரச்சினை. மேலும் பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற்றம். பொறாமை வராதா என்ன? மேலும் இவர்கள் இந்தியாவிலிருந்து கொள்ளை அடித்த அறுவது டிரில்லியன் பவுண்டுகளையும்,
தலைப்புக்கும் செய்திக்கும் சம்மந்தமில்லை, அந்த ஆவணப்படத்தை பார்க்காதவறிடம், கருத்து கேட்டும், அவர் அதற்கான பதில் கொடுக்காமல், இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் உள்ள உறவு முறையை விவரித்துள்ளார். ரிஷி சுணக்கின், ஆவணப்பட கருத்திற்கு அந்த நாட்டு ஊடகங்கள் அவரை வன்மையாக கண்டித்து கொண்டிருந்ததும் இந்திய ஊடகங்கள் எங்கேயோ நடக்காதது போல் தங்களுக்கு தேவையான செய்தியை மட்டும் வெளியிட்டு பாசத்தை வெளியிட வற்புறுத்தப்பட்டுள்ளார்கள்
அப்படி வன்மையாக கண்டித்த அந்நாட்டு ஊடகம் எதாவது ஒன்றின் பெயரை சொல்லுங்களேன்.
முகலாயர் செய்த அட்டூழியங்களை😛 படமாக எடுத்து அரசே வெளியிட வேண்டும். அப்போது உன் போன்ற பொய்யர்கள் நவ துவாரங்களையும்....
ஒரு பெண்ண காவலரை யாரோ கயவர்கள் ஒரு மாநிலத்தில் பாலியில் துன்புறுத்தல் செய்தால் , மாநில முதலவர குறை சொல்வது அநியாயம்.அப்படித்தான், இரண்டு ரயில் பெட்டியில் இருந்தவர்களை ஒரு கட்சியின் தூண்டுதலால் உயிரோடு கொளுத்தியதும் , கொதித்து ஏழைங்க சமூகம் கண் மூடித்தனமாக செயல் பட்டது , அண்டை மாநிலங்கள் ஊதி வளர்த்ததே தவிர துணையை கெஞ்சி கேட்டும் கொடுக்க வில்லை.பின் எப்படி கலவரம் நடந்த மாநில முதவரை , அவரே தூண்டியது போல சித்தரிக்கலாம்.மக்களை மதத்தால் பிரித்து ஓட்டுக்களை குவிக்க நினைத்தது யார்? அன்றும் அந்நியன் ஆங்கிலேயன், இன்றும் இந்தியாவை வளர கூடாது என்று நினைக்கிறான்.மக்கள் மறந்ததை , பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கோர்ட்டுக்கு சென்றும் , கோர்ட்டு மாநில முதலமைச்சருக்கு சம்பந்தம் இல்லை என்று சொன்ன பிறகும், ஏன் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அந்நிய சக்திகளை நாடுகிறார்கள்.ஆண்டவன் தண்டித்தும் திருந்தாத அர்சியல்வாதிகள்.இருபது வருடங்கள் கழித்து நோண்டுவது vanmath
இந்தியன் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு உச்ச நீதி மன்றம் என்பதும் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் என்ன செய்தார்கள் என்பதும் இந்தியன் என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆகவே இந்தியன் என்று சொல்லிக்கொல்வது மட்டுமன்றி இந்தியன ஆக வாழவும் வேண்டும்.அவ்வளவு தான். வெளிநாட்டில் உள்ள ஊடகங்கள் அவர்கள் நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவில் என்ன செய்தார்கள் எத்தனை கொலைகளை புரிந்தார்கள் எவ்வெவ்ற்றை கொள்ளை அடித்து அங்குள்ள அரண்மனைகளிலும் பொருட்காட்சியில் வைத்திருக்கிறார்கள் என்று இன்னொரு ஆவண படம் வெளியிடட்டுமே பார்க்கலாமே ஜனநாயகம் சம நீதி ஊடக தர்மம் என்ன என்பதை எல்லாம்?
இந்தியாவும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது செய்த கொடுரங்களை படமாக எடுத்து பி.பி.சிக்கு பதிலடி கொடுக்க வேண்டும் வாயைமூடிக்கொண்டு சும்மா இருக்கக்கூடாது செய்வார்களா விரைவில் நமது அரசியல்வாதிகள் பட தயாரிப்பாளர்கள்? இந்தப்படத்தை எப்படி அந்த நாட்டு தணிக்கை குழு அனுமதித்தது என்றே தெரியவில்லை. உலகத்தையே பழிவாங்கிய கொடூர கொலையாளிகளின் செயல்களை அடுத்த தலைமுறை பார்க்க வேண்டும் .