ADVERTISEMENT
புதுடில்லி: சிறப்பாக பணியாற்றியவர்களுக்கான ஜனாதிபதி பதக்கம் இந்தாண்டு (2023) 901 பேருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 21 போலீசார் இப்பதக்கம் பெறுகின்றனர்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சிறப்பாக பணியாற்றிய சிறப்பாக சேவையாற்றிய போலீஸ் அதிகாரிகள், துணை ராணுவத்தினர், ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படும். அந்த வகையில், இந்தாண்டு இந்தியா முழுவதும் உள்ள 901 பேருக்கு ஜனாதிபதி பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சேவைக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் பதக்கம் 21 போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி காவல் பதக்கம் தமிழகத்தை சேர்ந்த ஐஜி தேன்மொழி, செங்கல்பட்டு எஸ்.ஐ பொன்ராமு, அரியலூர் ஏஎஸ்பி ரவிசேகரன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தை சேர்ந்த 21 போலீசாருக்கு சிறந்த சேவைக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!