Load Image
Advertisement

டயர்கள் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது- யோசித்து இருக்கோமா?

Tamil News
ADVERTISEMENT
நாம் பயன்படுத்தும் வாகனங்களான சைக்கிள், பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் டயர் மட்டும் ஏன் கருப்பு கலரில் உள்ளது என யோசித்து இருக்கோமா? இதைப் பற்றித் தெரிந்து கொள்ள சுமார் 120 வருடங்களுக்கு முன் சென்றால் தான் அதை அறிந்து கொள்ள முடியும். எத்தனை கோடி செலவு செய்து விதவிதமாக கலர்களில் நீங்கள் ஆசை, ஆசையாய் வாகனங்களை வாங்கினாலும், அதன் டயர் கலர் மட்டும் கருப்பாகத் தான் இருக்கும்.
Latest Tamil News கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்னர் தான் டயரை முதன் முதலில் கண்டுபிடித்துள்ளனர். அப்போது டயர்கள் தற்போது உள்ளது மாதிரி கருப்பு கலரில் இருந்தது இல்லை. டயர்கள் பொதுவாக ரப்பரில் தான் செய்யப்படுகிறது. இதனால் ரப்பல் பால் நிறமான பழுப்பு வெள்ளை நிறத்தில் தான் ஆரம்பத்தில் டயர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படி வெறும் ரப்பர் பாலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட டயர்களின் தரம் குறைவாகவும், அதிக நாட்கள் உழைக்காமலும் இருந்துள்ளது.
Latest Tamil News ரப்பர் பாலை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்ட டயரால் ஆன வாகனங்கள் சாலையில் செல்லும் போது, கற்கள், முற்கள் உள்ளிட்டவை எளிதில் குத்தி கிழித்து சேதமாக்கியுள்ளது. இதனால் டயர்களை வலுவாக மாற்ற ரப்பர் பாலுடன் கார்பன் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டது. அப்படிச் சேர்க்கப்பட்ட கார்பன் மூலக்கூறுகள் தான் டயருக்கு கருப்பு நிறத்தைக் கொடுக்கிறது.அதுமட்டுமல்லாமல் அதிக நாட்கள் உழைக்கவும் செய்துள்ளது.

கார்பன் மூலக்கூறுகள் சாலைக்கும், டயருக்கும் இடையே உள்ள உராய்வு தன்மையைக் குறைக்கிறது. ஆனால் வெறும் ரப்பரினால் ஆன டயர் என்றால் உராய்வு தன்மை அதிகம் இருக்கும். இதனால் அடிக்கடி செலவு வைக்கும். மற்றொரு காரணம் எந்த மாதிரியான வெப்பநிலை என்றாலும், அது நீடித்து உழைப்பதற்கு கார்பன் மூலக்கூறு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத் தவிர வெள்ளை கலரோ அல்லது வேறு ஏதாவது கலரில் டயர்கள் இருந்தால் அதனால் வெப்பத்தைத் தாங்கி கொண்டி நீடித்து உழைக்க முடியாது.
Latest Tamil News டயர் என்பது ஒரு வாகனத்திற்கு முக்கியமான ஒன்றாகும். இதனால் தான் குறைந்த தரத்தில் டயர்களை தயாரிக்க அரசு அனுமதி வழங்குவதில்லை. ஒருவேளை டயர் உற்பத்தியிலும் மாற்றம் தேவை என பல்வேறு கலர்களில் டயர்கள் தயாரித்து விற்பனைக்கு வந்தால், அது விற்பனையாளருக்கு லாபம் அளிக்குமே தவிர, வாகனம் வைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் பலனைக் கொடுக்காது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement