சென்னை: தமிழக அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் பாராட்டினாலும், அவர்கள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி, முதல்வருக்கு சிக்கலை கொண்டு வந்துவிடுகின்றனர். அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பொன்முடி, ராமச்சந்திரன், நேரு என சர்ச்சைக்குள் சிக்கியுள்ளவர்கள் ஒன்றொன்றாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பால்வளத்துறை அமைச்சர் நாசரும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த அமைச்சர் நாசரின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ‛நாசரிடம் ஒரு பொறுப்பு கொடுத்தால், அந்த பொறுப்பை முழுமையாக, வெற்றிகரமாக, எல்லோரும் பெருமைப்படக்கூடிய வகையில் அதை நிறைவேற்றக்கூடிய ஆற்றலை பெற்றவர் நண்பர் நாசர்' என பாராட்டினார். இந்த நிலையில், இது நடந்து ஒரு மாதத்திற்குள் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நாசர்.
திருவள்ளூரில் முதல்வர் விழா தொடர்பான ஆய்வுக்கு சென்ற அமைச்சர் நாசர், அங்கிருந்த தொண்டர்களிடம் நாற்காலி எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஆனால் நாற்காலிகளை எடுத்துவர தாமதம் ஆனதாலும், குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை எடுத்து வந்ததாலும், ஆத்திரமடைந்த அமைச்சர், கீழே கிடந்த கல்லை எடுத்து, தொண்டரை நோக்கி எறிந்தார்.
கடும் கோபத்தில், வேகமாக நாற்காலிகளை எடுத்து வரும்படி திட்டினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அமைச்சரின் தரம் கெட்ட செயல் என பலரும் விமர்சனம் செய்தனர

இந்த நிலையில் முதல்வர் பாராட்டு தெரிவித்த வீடியோவையும், அமைச்சர் நாசர் கல் எடுத்து எறியும் வீடியோவையும் இணைத்து பல்வேறு சினிமா காட்சிகளுடன் உருவாக்கப்பட்ட ‛மீம்' வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வாசகர் கருத்து (17)
கல்லெறியும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறார் முதல்வர் என நினைக்கிறேன்
செங்கல்லால் கட்சி தொண்டரை அடிப்பது அவருக்கு கொடுக்கப்பட்ட 'பொறுப்பா' முதல்வரே? அந்த பொறுப்பை அவர் சிறப்பாக செய்தார் என்று பெருமை பேச்சு வேறு... ஹ்ம்ம்... என்னத்த சொல்ல உங்க 'பொறுப்பான' பொருக்கி அமைச்சர்களை (அதாவது செங்கல்லை தரையில் இருந்து பொறுக்கியதால், பொருக்கி என்று குறிப்பிட்டேன். அவ்வளவுதான்...) பற்றி...?? எல்லாம் மக்களாகிய எங்க தலை எழுத்து. இன்று செங்கல். நாளை? கருங்கல்லாக இருக்குமோ... எதற்கும் உங்களிடம் இருந்து சற்று தள்ளியே நிற்பது எங்களுக்கு நல்லது.
இனி கல்லெறி நாசர் என்று அன்புடன் அழைக்கப்படுவார்.
கல்லால் எறிந்து கொள்வது அவர்களின் கடமைகளில் ஒன்று. அதைத்தான் செய்திருக்கின்றார். அதை பின் பின் பற்றும் திராவிடர்களும் தமிழர்களுக்கு எதிராக செய்கின்றார்கள்.
கல்எறியும்பொறுப்பிற்கே அவார்ட் தரலாம்