அதே போல் பிக் பாஸ் 6வது சீசனின் இறுதி நிகழ்ச்சியில் கமல் அணிந்திருந்த டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ்க்கும், பலர் தங்களுக்கு தோன்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர். சிலர் போட்டி முடிவு பிடிக்காததால் தான் கமல் இது போன்ற உடை அணிந்ததாக சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கின்றனர். சரி அது இருக்கட்டும், இந்த 'டிஸ்டிரஸ்டு ஜீன்ஸ்' கலாசாரம் எப்படி தோன்றியது என பார்த்துவிடுவோம்.

டிஸ்ட்ரஸ்டு ஜீன்ஸ் இன்று வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் ஆரம்பத்தில் அதனை வித்தியாசமாகத் தான் பார்த்தார்கள். எப்படி இன்று பேஷன் ஷோக்களில் வித்தியாசமான உடையணிந்து கேட்வாக் செய்பவர்கள் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறார்களோ அப்படித்தான் ஒரு காலத்தில் டிஸ்டிரஸ்டு ஜீன்ஸும் கருதப்பட்டது.
ஜீன்ஸ் வரலாறு
ஜீன்ஸ் முதன்முதலில் 1800களின் பிற்பகுதியில் லீவை ஸ்ட்ராஸால் வடிவமைக்கப்பட்டது என்பது பலருக்கு தெரிந்திருக்கும். அவர் தான் ட்வில்ட் காட்டனை உறுதியான, நீண்ட காலம் உழைக்கும் பேன்ட் ஆக்க முடியும் என கண்டுபிடித்தவர். சுரங்கப் பணி போன்ற கடினமான வேலையில் ஈடுபடும் பணியாற்றுவர்களுக்கும் அது வசதியாக இருந்தது. இதனால் இது மிகவும் பிரபலமாகி, வேலை இடத்திற்கு வெளியே சாதாரண ஆடைகளாக மாறியது.
எதிர் கலாசார இயக்கம்
1970கள் கலாசார எதிர்ப்பு மற்றும் இளைஞர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்ட காலம். பழமைவாதத்தை எதிர்த்தார்கள். டிஸ்கோக்கள் தோன்றின. தனிநபர் பேஷன் என்பது அமெரிக்கா, ஐரோப்பாவில் மாறத் தொடங்கியிருந்தது. அந்த 70களில் பிரிட்டனில் மார்கரெட் தாட்சரின் பழமைவாத மற்றும் கட்டுப்பாடான கொள்கைகளை நிராகரிக்கும் ஒரு எதிர் கலாச்சாரத்தை பங்க் (Punk) இசை மூலம் ஜானி ராட்டன் என்பவர் உருவாக்கினார். அரங்கை அதிர விடும் அந்த பங்க் இசை நிகழ்ச்சிகள் தான் இந்த கிழிந்த ஜீன்ஸ்கள் தோன்றிய இடம். உடைகளை கிழித்து, அதில் வாசகங்கள் போன்றவற்றை ஒட்டினார்கள். வேண்டுமென்றே தொழில்முறையற்றதாக்கப்பட்ட டெனிம்கள் தான் இந்த பங்க்களின் விருப்பப் பொருளாக மாறியது. இப்படி ஜீன்களை கந்தலாக்குவது, அதில் கிறுக்குத் தனமாக ஏதாவது செய்வது என்பது, பிரிட்டனின் பழமைவாத சித்தாந்தத்தை மறுகட்டமைப்பதற்கான அவர்களின் சவாலுக்கு அடையாளமாகக் கருதப்பட்டது.
1970களின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் பங்கிலிருந்து இந்த ஸ்டைலானது வட அமெரிக்க இளைஞர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டது. புரட்சிகர சிந்தனை கொண்ட இளைஞர்கள் இதனை விரும்பி அணிந்தனர். இக்கி பாப் முதல் 1990களின் முற்பகுதியில் கர்ட் கோபேன் வரை டிஸ்டிரஸ்டு டெனிம் அணிந்து அதனை பிரபலமாக வைத்திருந்தனர். அது இன்றும் தொடர்கிறது.
இப்போதுப் புரிந்திருக்கும் இந்த டிஸ்டிரஸ்டு டெனிம் என்ன என்பது. கிழிந்த, ஓட்டை ஒடிசலான, நூல்கள் வெளியேறிய, பிற வெளிப்படையான சேதமடைந்த அறிகுறிகளைக் கொண்ட எந்த டெனிமையும் இப்படி அழைக்கலாம்.
வாசகர் கருத்து (21)
ஒரு மூர்க்கனும், ஒரு சீட்டாவும் முதலிரண்டு இடம் பிடிக்குமளவு, நிகழ்ச்சி ரசிகர்களின் பொது அறிவு தாழ்ந்து இருக்கிறது.
போலீஸிடம் மாட்டி கொண்டால் ஹிந்து என்றோ கூறுவான், வோட்டு வேண்டும் என்றால் முஸ்லிமாக மாறுவான், பணம் வேண்டும் என்றால் கிறித்துவனாக மாறுவான், மானம் கெட்டவன்
செஞ்சோற்றுக் கடன் தீர சேராத இடம் தேடி வஞ்சத்தில் வீழ்ந்தவர் கமல்.
I thought his dress is full of crow or pigeon shit
ஒரு மூர்க்கனும், ஒரு சீட்டாவும் முதலிரண்டு இடம் பிடிக்குமளவு, நிகழ்ச்சி ரசிகர்களின் பொது அறிவு தாழ்ந்து இருக்கிறது.