Load Image
Advertisement

கட்சிக்காரர் மீது கல்லை விட்டு எறிந்த திமுக அமைச்சர்: வாசகர்களே! இங்கு எழுதுங்கள் உங்கள் கருத்தை

DMK minister who threw a stone at a party member: Readers, write your opinion here   கட்சிக்காரர் மீது கல்லை விட்டு எறிந்த திமுக அமைச்சர்: வாசகர்களே! இங்கு எழுதுங்கள் உங்கள் கருத்தை
ADVERTISEMENT
சென்னை: கீழே கிடந்த கல்லை எடுத்து கட்சிக்காரரை எறிந்த அமைச்சர் நாசரின் ஆவேச செயல், அரசியல் வட்டாரத்தில் தரம் கெட்ட நடவடிக்கையாக கருதப்படுகிறது. முதல்வர் விழா தொடர்பான ஆய்வுக்கு சென்ற அமைச்சர், இப்படி அதிகாரிகள் முன்னிலையில், ஆத்திரத்துடன் நடந்து கொண்ட விதம், பல தரப்பிலும் கடும் கண்டனத்தை எழுந்துள்ளது. வாசகர்களும், தங்களின் எண்ணங்களை கருத்துக்களாக ' வாசகர் கருத்து(கமென்ட்)' பகுதியில் இந்த செய்தியில் எழுதலாம்.

திமுக சார்பில் மொழிப்போர் போராட்டத்தில் உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் வீரவணக்க நாள் கூட்டம் நடத்தப்படும். இந்த ஆண்டும், அனைத்து மாவட்டங்களிலும், இன்று வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜன.,25) நடக்க உள்ள பொதுக்கூட்டத்தில், தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
அதையொட்டி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் எதிரில், திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலை, ஐ.சி.எம்.ஆர்., அருகில் மேடை அமைக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று பார்வையிட்டார். அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது நிர்வாகிகள் அமர, அங்கிருந்த தொண்டர்களிடம் நாற்காலி எடுத்து வருமாறு, அமைச்சர் நாசர் கூறினார்.
நாற்காலிகளை எடுத்து வர தாமதம் ஆனதாலும், குறைந்த எண்ணிக்கையில் நாற்காலிகளை எடுத்து வந்தாலும், அமைச்சர் நாசர் ஆத்திரம் அடைந்தார். உடனே கீழே கிடந்த கல்லை எடுத்து தொண்டரை நோக்கி எறிந்தார்; கடும் கோபத்தில் வேகமாக நாற்காலிகளை எடுத்து வரும்படி திட்டினார்.

Latest Tamil News
ஆத்திரத்துடன் அவர் தொண்டர் மீது கல் வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அமைச்சரின் செயல் கண்டு, அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் க ண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வாசகர்களும் தங்களின் கருத்துக்களை 'வாசகர் கருத்துகள்' பகுதியில் எழுதலாம்.


வாசகர் கருத்து (177)

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    கிரிக்கெட் பௌலிங் பயிற்சி செய்யும்போது எடுத்த போட்டோ.

  • பிடிகிட்டாபுள்ளி - எத்தியோப்பியா,மங்கோலியா

    எனக்கென்னமோ, உற்றுநோக்கும்போது விமானத்தில் எமர்ஜென்ஸி கதவை திறந்தவர்

  • பேசும் தமிழன் -

    நிலமை தான் அந்தோ பரிதாபம் ...

  • rasaa - atlanta,யூ.எஸ்.ஏ

    திராவிட மாடலில் இதுவும் ஒன்று

  • Rajamani K - Chennai,இந்தியா

    பாலஸ்தீனத்தில் மற்றும் காஷ்மீரில் இவர் செல்லலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்