ADVERTISEMENT
நெய்வேலி: ''ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க., கூட்டணி களத்தில் இறங்கி போராடி கொண்டிருக்கிறோம்; ஆனால், தேர்தல் களத்தில் எதிரிகளையே காணவில்லை'' என, தமிழக காங்., தலைவர் அழகிரி பேசினார்.
கடலுார் மாவட்டம், நெய்வேலியில் நடந்த காங்., ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்., கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். எங்கள் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின், எங்களை அழைத்து பெருந்தன்மையுடன் போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார்.
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் யார் போட்டியிட போகிறார்கள் என்பதையே இதுவரை அறிவிக்கவில்லை.
கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் த.மா.கா., போட்டி யிட்டது.
எனவே, இந்த முறை அவர்களை அழைத்து போட்டியிட அ.தி.மு.க., வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.
ஆனால், அ.தி.மு.க., அவர்களை கழற்றிவிட்டு விட்டனர். பா.ஜ., எங்கே என்பது தெரியவில்லை. போதாக்குறைக்கு அ.தி.மு.க.,வில் உள்ள 4 பிரிவினரும் நாங்கள் தான் போட்டியிடுவோம் எனக்கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ., வளர்ந்து விட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அவருக்கு தைரியம் இருந்தால் எங்கள் வேட்பாளர் இளங்கோவனை எதிர்த்து நிற்க வேண்டும். நாங்கள் இதை சவாலாக கூறுகிறோம். அப்படி நின்றால் அவரின் துணிச்சலை வரவேற்போம்.
பா.ஜ.,தான் பெரிய கட்சி என கூறி வந்த அண்ணாமலை, தேர்தல் என்றவுடன் 'எங்கள் கூட்டணியின் பெரிய கட்சி அ.தி.மு.க.,தான்.
எனவே, அவர்கள் தான் போட்டியிடுவார்கள்' என கூறுகிறார். அதனால்தான், தமிழக பா.ஜ.,வை நாங்கள் காகிதப்புலி என கூறுகிறோம். காகிதப் புலி வேட்டை ஆடாது. காட்சிப் பொருளாக தான் பார்க்கலாம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்., கட்சி வெற்றி பெறும். அதற்காக நாங்கள் போராடிக் கொண்டு உள்ளோம். ஆனால் தேர்தல் களத்தில் எதிரிகளையே காணவில்லை.
இவ்வாறு அழகிரி பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஏதிர்கள் இல்லாத களம் ல் எப்படி போராடுகிறார் ~ 1 ~ களம் ல் எதிரிகள் பலமாக இருக்க வேண்டும் ~ அப்போது தான் போட்டி சுவாரசியமாக இருக்கும் ~ எதிரிகள் இல்லை என்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்து ~