ADVERTISEMENT
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே, நேற்று முன்தினம் காணாமல் போன இரண்டரை வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த நாச்சியார்பேட்டையை சேர்ந்தவர் அருள்செல்வன், 30. இவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இரண்டரை வயதுடைய இரண்டாவது மகன் அபிநாத் நேற்று முன்தினம் வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தார். காலை 10:00 மணியில் இருந்து சிறுவனை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீசார் தனிப்படை அமைத்து குழந்தையை தேடிவந்தனர்.
நேற்று இரவு 7:00 மணிக்கு, நாச்சியார்பேட்டையை சேர்ந்த கணபதி என்பவரின் வீட்டு தோட்டத்தில் உள்ள தரைக்கிணற்றில் அபிநாத் சடலம் மிதப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
சேத்தியாதோப்பு டி.எஸ்.பி., ரூபன்குமார், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் மற்றும் போலீசார், ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், அபிநாத்தின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!