ADVERTISEMENT
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே காப்புக்காட்டில் மயில்களை வேட்டையாடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் எங்கள்துரை, போலீசார் விஜயகுமார், கோவிந்தன், மணிகண்டன் ஆகியோர் நேற்று ரோந்து சென்றனர்.
அதிகாலை 4:00 மணியளவில் குஞ்சரம் காப்புகாடு பகுதியில் இருந்து பைக்கில் சாக்கு மூட்டையுடன் வந்தவரை மடக்கி விசாரித்தனர்.
அவர், உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர்பாளையம் வின்சென்ட் மகன் பவுல்அமல்ராஜ், 21, கூலித் தொழிலாளி என்றும் காப்புகாட்டில் இரு பெண் மயில்களை நாட்டு துப்பாக்கியால் வேட்டையாடி எடுத்து வந்ததும் தெரியவந்தது.
அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, பவுல்அமல்ராஜை கைது செய்து, மயில்கள், நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன் முன்னிலையில், உளுந்துார்பேட்டை வனச்சரக அலுவலர் ரவியிடம் பவுல்அமல்ராஜை ஒப்படைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!