ADVERTISEMENT
கடலுார் : சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.
கடலுார் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி, வீட்டின் வெளியே தனது தாயுடன் துாங்கிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி பாவாடை மகன் ஸ்ரீதர், 28, சிறுமியை எழுப்பினார். பேச வேண்டும் எனக் கூறி, வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதே போன்று, பல முறை சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ஸ்ரீதரை கைது செய்தனர்.
கடலுார் போக்சோ கோர்ட்டில் வழக்கு விசாரணை முடிந்து, நீதிபதி எழிலரசி நேற்று தீர்ப்பு கூறினார்.
இவ்வழக்கில், கூலித் தொழிலாளி ஸ்ரீதருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜரானார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!