ADVERTISEMENT
வானுார் : விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அடுத்த குயிலாப்பாளையத்தைச் சேர்ந்தவர் பாபு என்கிற ரிலையன்ஸ் பாபு.
இவர் கடந்த 2018ம் ஆண்டு, அவரது மகளை பள்ளியில் இருந்து பைக்கில் அழைத்து வந்தபோது, குயிலாப்பாளையம் தாதா மணிகண்டன் தரப்பினர் கொலை செய்தனர்.
அடுத்த சில தினங்களில், காலாப்பட்டு காங்., பிரமுகர் ஜோசப் என்பவரை, கிழக்கு கடற்கரை சாலையில், பொம்மையார்பாளையம் அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது.
இந்த 2 வழக்குகளிலும், முக்கிய குற்றவாளியாக, புதுச்சேரி, பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் சங்கர் கணேஷ், 32; என்பவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பின், ஜாமினில் வந்தவர், வானுார் கோர்ட்டில் நடந்து வரும் 2 கொலை வழக்குகளிலும் ஆஜராகாமல் மூன்று ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், சங்கர் கணேஷ் கொடைக்கானலில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார், கொடைக்கானல் போலீசார் உதவியுடன் சங்கர் கணேஷை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!