ADVERTISEMENT
கண்டமங்கலம், : விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணாபுரம், பாக்கம் (பாக்கம் கூட்ரோடு) ஸ்ரீ பச்சைவாழி அம்மன் கோவிலில் நாளை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், தனபூஜை, கோ பூஜை நடந்தது. மாலை 4.00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி நடந்தது.
நேற்று மாலை 4:30 மணிக்கு அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை, மற்றும் தீபாராதனை நடந்தது.
இன்று 25ம் தேதி காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது.
நாளை 26ம் தேதி காலை 7:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, தத்வார்ச்சனை, நாடி சந்தானம், மகா தீபாராதனைக்குப்பின், கடம் புறப்பாடு நடக்கிறது.
அதை தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் விநாயகர் மற்றும் பரிவாரங்களுடன், மன்னாதீஸ்வரர், பச்சைவாழி அம்மனுக்கு மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை திருப்பணிக்குழுத் தலைவர் வேணுகோபால், பொருளாளர் விஜயரங்கம் மற்றும் கிருஷ்ணாபுரம், பாக்கம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!