சுற்றுலா பயணிகள் வர தடை என வதந்தி பரப்பிய இருவரிடம் விசாரணை
அரியாங்குப்பம் : ஜி 20 மாநாடு நடைபெற உள்ளதால் புதுச்சேரிக்கு மூன்று நாட்கள் சுற்றுலா பயணிகள் வர தடை என சமூக வலை தளத்தில் வதந்தி பரப்பியது தொடர்பாக இருவரை பிடித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியில், வரும் 30 மற்றும் 31ம் தேதி ஆகிய இரு நாட்கள் ஜி20 மாநாடு நடக்கிறது. இதில் பல்வேறு நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், 'ஜி 20 மாநாட்டையொட்டி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை சுற்றுலா பயணிகள் சின்ன வீராம்பட்டிணம் பகுதிக்கு வர தடை செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகள் இயங்காது. பொதுமக்கள் மளிகைப் பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்' என சின்ன வீராம்பட்டிணத்தை சேர்ந்த தனியார் ஓட்டல் நிர்வாகம் தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதையறிந்த சின்ன வீராம்பட்டினம் தனியார் ஓட்டல் மேலாளர் மகேந்திரகுமார், 'எங்கள் ஓட்டல் பெயரை களங்கப்படுத்த தவறான தகவலை சமூக வலைதளங்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!