பள்ளி அருகே கஞ்சா இளைஞர் கைது
திருச்சுழி நகர் பகுதியில் எஸ்.ஐ., சிவக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சுழி சேதுபதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கண்மாய் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இளைஞனை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர் திருச்சுழி அருகே, உலகத்தேவன்பட்டியைச் சேர்ந்த முத்து பெரியண்ணன்,24, என்பதும், பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்த 490 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவனை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!