ADVERTISEMENT
கண்டமங்கலம் : கண்டமங்கலத்தில் குறுகிய சாலையில் சென்ற காரின் முன்பக்க சக்கரம் சாலையோர பள்ளத்தில் இறங்கியது. பொதுமக்களின் எச்சரிக்கையால் டிரைவர் காயமின்றி தப்பினார்.
விழுப்புரம் - நாகை நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் பணிக்காக, சாலையின் இரு பக்கமும், ஒரு வழிப்பாதையும், நடுவே மேம்பால பணிக்கான 2 அடி ஆழ பள்ளமும் உள்ளது.
நேற்று முன்தினம் புதுச்சேரியில் இருந்து கண்டமங்கலம் நோக்கிச் சென்ற கார், நவமால்மருதுார் சாலை, நான்குமுனை சந்திப்பு அருகே குறுகிய சாலையில் சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட்டு டிரைவர், காரை இடது பக்கம் திருப்பினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக காரின் இடதுபக்க முன்சக்கரம் பள்ளத்தில் இறங்கியது. உடன் அப்பகுதி மக்கள் டிரைவருக்கு எச்சரிக்கை செய்து, கார் பள்ளத்தில் கவிழாமல் மீட்டனர். இதனால் கார் டிரைவர் காயமின்றி தப்பினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!