ADVERTISEMENT
கள்ளக்குறிச்சி : கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகளை, அதன் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மீட்டு கொள்ளலாம் என, காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி இறப்பு தொடர்பாக, கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 17 ம் தேதி நடந்த போராட்டம், கலவரமாக மாறியது.
அப்போது பள்ளி வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கேட்பாரற்ற நிலையில் இருந்த பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்து, சின்னசேலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.
142 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதில் 3 பைக்குகள் நீதிமன்ற சொத்துக்களாக சேர்க்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள 139 பைக்குகளில், 48 வாகனங்களின் உரிமையாளர்கள் ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்து மீட்டுக்கொண்டனர். மற்ற வாகனங்களை மீட்டுக்கொள்ள உரிமையாளர்கள் வராததால் வெயிலிலும் மழையிலும் நின்று வீணாகி வருகிறது.
எனவே, போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக்கின் உரிமையாளர்கள், வாகனத்தில் ஆர்.சி., புக் மற்றும் ஆதார் அட்டையுடன் நேரில் ஸ்டேஷனுக்கு வந்து ஆவணங்களை சமர்ப்பித்து பைக்கினை பெற்றுக்கொள்ளலாம் என, காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!